வியாழன், 11 ஆகஸ்ட், 2016



உண்மையான அறிவியல் என்பது மக்கள்கிட்ட சென்றடையணும். அதச் செய்யாதது அறிவியல் கிடையாது. மக்கள் கிட்டச் சேரும்போதுதான் அது முழுமையான வடிவத்துக்கு வரும். அப்படியில்லாம அது எங்கெங்கயோ, யார் யாரோடயோ ஆளுகைக்குள்ள / மேலாண்மைக்குள்ள இருக்குமானா அது அறிவியலே இல்லஎன முழங்கும் சித்தர் மரபு பேசும் அசித்தரின் குரல் புயலின் வலிமையும் எரிமலையின் ஆவேசமுமாய்க் கனல்கிறது.
களவாடின ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுநர் பெயரை நிறுவி, மொழிபெயர்த்து, தனது என்று காட்டிக் கொள்வது ஆரியத்தின் வேலை” (பக் - 180)
மனம் தொடர்பாக உங்களிடம் பேச வருகிறவர்கள் எல்லோருமே உங்களை ஏமாற்ற வருகிறார்கள்பக் - 182
எது ஒன்றையும் திரும்பத்திரும்ப நினைப்பது, ஒலிப்பது நம் இளைஞர்களைப் பேடிகளாக்கக், காயடிக்கச் செய்கிற வேலை” (பக் - 185)
இயற்கையைப் புரிந்துகொள்வதைத்தான் இயற் கையை வெல்வது என்று சொன்னார்கள். அதைச் சீர்கெட வைத்து, அழித்து, முரணாகப் பயன்படுத்துவது வெல்வது அல்ல. அப்படி எந்த வகையிலும் இயற்கையை வெல்ல முடியாது. அதன் எதிர்வினைகளை நாம் சந்திக்க வேண்டி யிருக்கும்” (பக் - 188)
வழிவழியாய்ப் பலதலைமுறைகளாய் நடை முறையில் உள்ளவை வழக்கம். நம் வாழ் நாளுக்குள் பழகும் நடைமுறைகள் பழக்கம். வழக்கங்கள் பண்பாடு. பழக்கங்கள் நாகரிகம்என அசித்தர் ஆழ்ந்த தத்துவத்தை எளிய சொற்களில் விளக்கிவிடும்போது பண்பாட்டு மானுடவியலின் ஒளி கசிகிறது.

மக்கள் இலக்கியத்தின் முன்னோடிகள் சித்தர்கள் தான்என உரத்துக் கூறும் அசித்தரின் நேர்காணல் யோகக் கலை, சித்தர் மரபு, சித்தர் பாடல்கள், தமிழர் தத்துவம், ஆரியச்சதி என விரிந்து பரவுகிற அதிசய மொழிப்புலம்.

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=10521:2010-08-20-15-48-09&catid=1169:10&Itemid=438

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக