சனி, 12 நவம்பர், 2011


குமரிக்கண்டம் ஊழி வெள்ளம்      தொகுப்பு - அசித்தர்
அகத்தியர் 12000
என்னும் பெருநூல் காவியம்.
இரண்டாம் காண்டம். 112ஆம் பக்கம். - தாமரை நூலகம்.

பிரளயம்

கேளப்பா திருமந்திர மெண்ணாயிரந்தான்
     கெடியான திருமூலர் சொன்னாரப்பா
நாளப்பா போகாமல் திரேதாயுகத்தில்
     நலமான பிரளயத்தில் முழுகலாச்சு
பாளப்பா வனேகம்பேர் சித்தர்செய்த
     பாங்கான திருமந்திர முழுதுமல்லோ
சூளப்பா பிரளயங்கள் வந்தபோது
     சுந்தரனே புலத்தியனே முழுகலாச்சே            413


ஆச்சப்பா திரேதாயி னுகத்தில்தானும்
     அற்புதமாங் கிரந்தங்க ளனேகங்கோடி
மூச்சடங்கி சமாதிதனி லிருந்தசித்து
     முனையான தேவரிடி கோடாகோடி
மாச்சலது வாராமல்  சமாதிபீடம்
     வைத்திருந்த கிரந்தங்க ளனேகங்கோடி
ஆச்சரிய மாகவல்லோ போகநாதர்
     அப்பனே குளிகைகொண்டு உரைத்தார்காணே    414

அகத்தியர் 12000
என்னும் பெருநூல் காவியம். 
நான்காம் காண்டம். 78-79  ஆம் பக்கம்.
வெளியீடு - தாமரை நூலகம்.              ஊழி வெள்ளம்
நிலையான நிட்டைபதி யோகங்கேட்பார்
நீணிலத்தி லட்டமா சித்திகேட்பார்
கலையான கலையமுர்தந் தானும்கேட்பார்
கருவிகர ணாதியந்த முடிவுங்கேட்பார்
மலைபோன்ற சாத்திரத்தி னிடமுங்கேட்பார்
மன்னவனே விருப்பிடமுங் கூறவேண்டாம்
தலையான பொதிகைமலை மருமங்கேட்பார்
சாத்திரத்தின் வுண்மைநிலை கூறுவாரே              278

கூறயிலே சாத்திரமும் நிலைகூறாதே
குணமுள்ள புலத்தியனே பொதிகைதன்னில்
மாறலாய் தேவரக சியங்களப்பா
மன்னவனே சித்தர்களுக்கு வெளிகாட்டாதே
மீறவே யவரிடத்தி லனேகங்கோடி
மிக்கான சாத்திரங்க ளதிதமெத்த
தேறவே சாத்திரத்தி னுளவாராய்ந்து
தேற்றமுடன் நுணுக்கவகை முறைதான்கொள்ளே     279

முறையான முறைபாடு வழியறிந்து
மூதுலகில் மூன்றுயுக பிரளயங்கள்
துறையான கலைபகுத்து யுகம்பிரித்து
துப்புரவாய் மூன்றுயுக சாத்திரங்கள்
கறையோடு மொழிபெயர்த்த நூல்களப்பா
கன்னவனே யிருபத்தோர் லட்சமுண்டு
பறையறைந்த மருமமது கிரந்தமப்பா
பாலகனே நுணுக்கமதை யறிந்துகொள்ளே            280     
ஐந்தாம் காண்டம். 80/120-128/158-159/161ஆம் பக்கம்.
வெளியீடு - தாமரை நூலகம்


பேராக குருக்களுக்கு சீடவர்க்கம்                     பிரளயம்
பேர்பெரிய சீடரப்பா நூற்றியெண்ப
கூராக சீடர்பதம் சீடரப்பா
குறிப்பான மாண்பர்களோ தொகையாரைந்து
பாராக பிரளயங்கள் நான்கு கண்டோர்
பாலகனே போகருக்கு குளிகைமாற்கம்
நேராகத் தான்கொடுத்து யுபதேசித்து
நேர்மையுட னஞ்சலிகள் மிகச்செய்தாரே         283

அகத்தியர் புலத்தியருக்கு திருவாலவாய் சொக்கநாதர் அசுவனியாரிடத்தில் வுபதேசம் பெற்றதை கூறல்

ஓதவே யின்னமொரு மகிமைகூர்வேன்         தென்மதுரை
யுத்தமனே புலத்தியனே மச்சகேந்திரா
நீதமுள்ள தென்மதுரை திருவாலவாயாம்
நீதியுள்ள பாண்டியர்க ளாண்டநாடு
தோதமுட னெனதைய ரசுவனியாந்தேவர்
தொல்லைவிட்டு சமாதிமுக மிருந்தகாலம்
வேதமனும் கடல்திறந்து நெடுங்காலந்தான்
வேதாந்தத் தாயிருந்த காலமாச்சே               443

காலமாம் துவாபரமாம் யுகத்திலப்பா
கண்மணியே புலத்தியனே யெந்தன்தேவர்
சீலமுட னுபதேசம் பெற்றேயேகி
சிலகாலம் யிதென்மதுரை திருவாயில்தன்னில்
கோலமுட னுபதேசம் பெற்றகாலம்
குருவானார் தேவேந்திர பட்டம்பூண்ட
ஆலமுண்ட சொக்கலிங்க நாதரப்பா
அன்பான சுவனியரிடம் சென்றார்காணே         444              

காட்டினா ரசுவனியார் கவலையோடும்
காவலனார் சொக்கலிங்க சுவாமிதானும்
மாட்டிமையா யுபதேசஞங் கொண்டுமேதான்     தென்மதுரை
மகிழுடனே தென்மதுரை திருவாயில்தன்னில் 
தாட்டிகமாய் தேவதா த்தானங்கண்டு
தண்மையுடன் திருக்கூத்து மிகவுமாடி
கூட்டமுட நடனமறு பத்துநாலும்
குவலயத்தி லாடிமிகப் பேர்கொண்டாரே          447

கொண்டாரே வட்டதிக்கு பாலராகி
கொற்றவரு மட்டாங்க யோகம்பூண்டு
மண்டணிமார் தேவதா மார்கள்மாரை
வளமையுடன் தான்மறந்து மகிமைகண்டு
சண்டமா ருதம்போல தரணிமீதில்
சாங்கமுடன் திருக்கோயில் பாண்டிநாடு
அண்டமுனி ரிடிநாதர் கொண்டேயாட
யவனியிலே சொக்கர்பதி யமர்ந்திட்டாரே              449


இட்டாரே பாண்டிவள நாடுதன்னில்
எழிலான பாண்டியனார் தேவத்தானம்
சட்டமுடன் தேவாதி தேவர்தாமும்
சதுருடனே கட்டிவைத்த பாண்டிநாடு
திட்டமுள்ள சந்நிதியில் நெடுங்காலந்தான்
தீர்க்கமுடன் சமாதிலிங்க மானார்பாரு
பட்டமுடன் தேவேந்திர பட்டமாகி
பாரினிலே தென்மதுரை யிருந்தார்பாரே         450









அகத்தியர் புலத்தியருக்கு பொதிகைமலை சார்பு கூறல்


பாரேதான் புலத்தியரே மச்சகேந்திரா
பாலகனே யெனதையர் சொன்னநீதி
நேரேதான் பொதிகைமலை சார்புதானும்     பொதிகைமலை          நெடிதான வம்பாளின் சேத்திரம்தான்
கூரேதான் மடமொன்று தடாகமுண்டு
குருபரனே சமாதியது காணலாகும்
சீரேதான் சமாதியிலே புசண்டர்தாமும்
சிற்பரனார் தாமிருந்தார் மகிமைகேளே                     451


கேளப்பா புலத்தியரே திரேதாயிலேதான்
கெவனமுடன் சமாதிமுகம் கொண்டசித்து
ஆளப்பா ரேணுகையா லுபதேசங்க
ளப்பனே பெற்றுமல்லோ மண்ணிற்சாய்ந்தார்
சூளவே சமாதியது துவாபரத்தில்
சூக்குமமமாந் தேகமது மறியாமற்றான்
மீளவே பின்னுமவர் வெளியிட்டேகி
மிக்கான தவநிலையி லிருந்தார்காணே                452


காணவே தவநிலையி லிருக்குங்காலம்
காவலனே பிரளயங்கள் நேர்ந்தபோது
பூணவே தென்பொதிகை சார்புமேலில்
புகழான சத்தரிடி தங்கள்முன்பால்
நீணவே வேத யாகமங்களோடு
திட்களங்க சபைதனிலே நெடுங்காலந்தான்
மாணமருஞ் சித்தர்முனி நாதரோடு
மகிதலத்தில் நடந்த்தை நவின்றிட்டாரே               453





கிருட்ணருக்கு உபதேச வரலாறு


காணவே கிருட்ணருக்கு உபதேசங்கள்
காவலரே காசினியில் பலவாயாகும்
தோணவே யிதிகாச மனேகமுண்டு
தொல்லுலகில் கூறிமுடி வாகாதப்பா
பூணவே திரேதாயி னுகத்திலப்பா
புகழான ராமரென்ற வவதாரத்தால்
நீணவே யுலகுபதி வாண்டகாலம்
நிகழ்ச்சியாய் சாபமதை செப்பக்கேளே            461


கேளப்பா புலத்தியா கெவனவானே
கெவனமுட தென்னதையர் சொன்னவாக்கு
ஆளப்பா திரேதாயின் மத்தியானந்தா
னப்பனே வாண்டுரண்டு பத்துக்குள்ளே
நாளப்பா மூன்றாவது பிரளயத்தில்
நாதாக்கள் சாபமது யேதென்றாக்கால்
சூளப்பா விலங்கைபதி மன்னரப்பா
சுகந்த ராவணனாலே கேடுண்டாமே             462


உண்டான கேடதுவு மேதென்றாக்கால்
யுத்தமனே ராமருக்கு சாபங்கேண்மோ
தண்டகாரணியமது செல்லவேதான்
தகமையுள்ள குணவதியாம் சீதைதன்னை
கொண்டுமே ராவணனும் சிறைகொண்டேக
கொற்றவனா ராமரவர் கோபங்கொள்ள
தண்டுளவ மாலையனும் யுத்தமீறி
தாரணியில் சாபமது கொண்டிட்டாரே            463




கொண்டாரே சாபமது யதிகமாகி
குவலயத்தில் நெடுநாளா பரிதவித்து
வண்டணியாம் சீதைதனை தானிழந்து
வையகத்தில் நெடுங்காலம் ஞானம்பூண்டு
தொண்டரெனு மேவலாளி கையினோடும்
தோராம லட்டாங்கம் செய்துமேதான்
அண்டர்தமை தானினைத்து வன்பர்தானு
மப்பனே நெடுங்கால மிருந்தார்பாரே             464


பாரப்பா திரேதாயின் காலமப்பா
காசினியில் நடந்ததொரு வண்மையப்பா
நேரப்பா யுகந்தோறும் கிட்ணநாயகன்
நெடுங்கால மிப்படியே யிருந்தார்பாரு
கூரப்பா வவரிருந்த காலந்தன்னில்
குவலயத்தில் வெகுகோடி வதீதவித்தை
சீரப்பா தாமுணர்ந்து நேசராகி
சிறப்புடனே யுபதேசம் பெற்றார்காணே                465


அகத்தியர் புலத்தியருக்கு நான்குயுக சித்தர் மகிமை கூறல்


தானான பிரகாசமான பூபா
தண்மையுள்ள புலத்தியரே தம்பிரானே
கோனான யெனதைய ரசுவனியாந்தேவர்                    நான்கூழி
கொற்றவரு மெந்தனக்கு வுரைத்தநீதி
கானான திரேதாயி னுகத்திலப்பா
பாலகனே யிருந்தவகை சித்துநாதர்
மானான மகபதிக ளிருந்தநாதர்
மன்னவனே கணக்கறிந்த கருவைக்கேளே       466




கருவனே கணக்கதுவு மேதென்றாக்கால்
காவலனே கன்னடியர் சித்துதானும்
உருவான சித்த்துவு மூன்றுலட்ச
முத்தமனே தேறினதோர் சித்துதாமும்
தெருளான ஞானசித்து தொகையைக்கேண்மோ
தோர்வில்லா சித்தர்களும் முனிவர் நாதர்
மருளான சித்தர்களு மநுக்கள் கோடி
மாநிலத்தி லிருந்தவர்கள் மகிமைதானே         467


தானான ஞானசித்து தொகையேதென்றால்
தகமையுள்ள சித்துவுந்தான் நாதர்தாமும்
கோனான சித்தர்நாற் பதினாயிரந்தான்
கொற்றவரே ஞானமென்ற சித்தேயாகும்
தேனான மனோன்மணியா ளருளுங்கொண்ட
தேசொளியின் சித்துமய மென்னலாகும்
மானான மகதேவர் கடாட்சத்தாலே
மானிலத்தி லிருந்தவர்க ளிவர்கள்தானே         468


திரேதாயுக சித்தர் பெருமைதொகை


தாமாக மின்ன்மொரு மாற்கங்கூர்வேன்
தண்மையுள்ள புலத்தியரே தம்பிரானே
பூமானாம் திரேதாயி னுகத்திலப்பா
           பூர்வமுடன் தேறினதோர் வண்மைசொல்வேன்
சீமானாம் சித்துமுனி நாதரப்பா
சிறப்புடனே யிருந்தவர்கள் தொகைதான்கூர்வேன்
தானான பிரளயங்க ளாண்டுகண்டாய்
நலமான நாதாக்க ளிருந்தாரே                   469




நாடான நாடதுவும் கூறப்போமோ
நளினமுடன் தேறினதோர் சித்துதாமும்
தாடாண்மை கொண்டதொரு சித்துதாமும்
தகமையில்லா வெட்டுலட்சம் சொச்சமாகும்
காடாண்ட வனத்துமகா ரிடிகளப்பா
காவணத்தில் தவயாகஞ் செய்தசித்து
நீடான சித்துகளோ மாயிரந்தா
நீதியுள்ள மலைச்சார்பு சித்துதானே             470

சித்தான சித்துமுனி நாதரப்பா
சீருலகில் யெத்தைனையோ கோடிசங்கம்
முத்தான துவாபரத்தின் ரிடிகள்தேவர்
மூதுலகி லிருந்தவகை தொகைதான்கூர்வேன்
பத்தான நாதரப்பா யிரண்டுலட்சம்
பாலகரே ஞானப்பா லுண்டசித்து
வித்தான தேறியதோர் சித்துதாமும்
வீரான வட்டமா யிரந்தானே               471

துவாபரயுகத்தில் தேர்ந்த சித்துகள்
    
     அட்டமா சித்துமுனி நாதர்தாமும்
அவனியிலே நெடுங்கால மிருந்தார்பாரே
திட்டமுடன் லோகவதி சயங்களெல்லாம்
தீர்க்கமுடன் கண்டுமிக வாராய்ந்தல்லோ
சட்டமுடன் பிரளயங்க ளெல்லாம்வென்று
சதுருடனே சாயுச்சிய பதவிகண்டு
நிட்டையிலே நெடுங்கோடி காலமட்டும்
நேர்மையுடன் யிருந்ததொரு சித்துவாமே        472







கலியுகத்து தேறின சித்தர் மருத்துவப்பெருமை

சித்தான சித்துரிடி நாதர்தாமும்
செகதலத்தில் கோடிசங்க முண்டேயப்பா
புத்தியுள்ள யெனதைய ரசுவனியாந்தேவர்
புகலவே யான்கேட்ட வரைபாட்டோடும்
கத்தான கலியுகத்து வாழ்க்கையெல்லாம்
காவலரே யாம்கேட்டு நுந்தமக்காய்
சத்தியமா யானுரைததே னன்புள்ளானே
சாங்கமுடன் தொகைகணக்கை சாற்றுவேனே         473

      சாற்றுவேன் தொண்ணூறு லட்சமப்பா
சதுரான சித்தர்முனி ரிடிகள்கூட்டம்
ஆற்றவே மெய்ஞ்ஞான சித்துதானு
மப்பனே யட்டலட்சமுமேயாகும்
போற்றவே பொய்ஞ்ஞான சித்துதாமும்
பொலிவாக சோடசமாஞ் சித்துலட்சம்
கூற்றனுக் கொப்பான கர்மிசித்து
குவலயத்தி லிருந்தவர்கள் தொகைதான்கேளே   474

தொகையான சோடசமாம் நான்குலட்சம்
தொகுப்பாக வட்டகருஞ் சித்துகேளு
பகையான சித்ததுவு மிருபதுலட்சம்
பாரினிலே யிருந்தவர்க ளக்கோயில்லை
மிகவான சித்ததுவும் கணக்குண்டோசொல்
மிக்கான பகைவரென்ற சித்துதாமும்
வகையான சித்துகளின் மாற்கமெல்லாம்
வையகத்தி லெனதையர் வகுத்திட்டாரே         475







முடிக்கவே யின்னமொரு மாற்கங்கூர்வேன்
மூதுலகை கட்டறுத்த முனிவர்பாதா
அடியான மேருவுக்கு வடபாகத்தில்
அப்பனே வடகாசி யென்னும்நாடு
படியான பதிநாடு தேவத்தானம்
பாலகனே காசியென்ற கோயிலப்பா
துடியான மகமேருச்சாரலாகும்
துப்புரவா யதனருமை சொல்லக்கேளே          597


வடகாசியுற்பத்தி வளங்கூறல்

சொல்லவென்றால் புலத்தியரே சொரூபவானே
சொற்பெரிய நாதாக்கள் கூறாவண்ணம்
வெல்லவே திரேதாயி னுகத்திலப்பா
வெகுகோடி கனகமலைச் சாரலாகும்
நல்லதொரு நாடுவள மேதென்றாக்கால்
நாதாந்த சித்துமுனி காணாநாடு
சில்லென்ற நாடுவனாந் திரங்கள்கண்டார்
சிற்பரரே வசுவனியார் வதீதம்காணே            598


அதீதமாங் கடலோடும் சத்ததீவு
அப்பனே மத்தியந்ந்தான் வடகாசியப்பா
ந்தீதமுள்ள நேவதாத் தளமுங்கண்ட
நலமான நிராமயத்தை நவிலக்கேண்மோ
பதீதமுள்ள கடலோரம் கெங்காகோடி
பாலமுர்தமானதொரு ந்திதானுண்டு
கதீதமுடன் திருப்பாலின் கடல்தானப்பா
காவலனே பொங்கியது வெள்ளமாச்சே                599






வெள்ளமாய் திருப்பாலின் கடல்தான் பொங்கி
வேகமுடன் கங்காவின் மேலெழும்ப
பள்ளமுடன் மடைதிறந்துவெள்ளம்பூண்டு
பாலகரே பிரளயங்கள் நேர்ந்தபோது
மெள்ளவே பூமியது மடைகள்பாய்ந்து
மேன்மையுடன் நெடுமேடு மடுவாய்நின்று
விள்ளவே கோபுரங்கள் மாபுரங்கள்
விளங்கவே பூமியின்கண் தோற்றலாச்சே        600


தோற்றவே தேவதாத் தளமுங்கண்டார்
தோராத மூலமென்ற சொரூபங்கண்டார்
மாற்றமென்ற மண்டபங்கள் மாடகூடம்
மன்னவனே துசத்தம்பம் யாவுங்கண்டார்
தேற்றமுடன் தடாகமது பன்னசாலை
தெளிவான யாக மண்டலமுங்கூட
காற்றதிகமில்லாத காசிநாடு
காவணத்தின் தன்பெருமை கழறுவேனே         601


பெருமையாம் வடகாசி பதிதானப்பா
பேரான கண்டமது சேரநாடு
அருமையாய் தபோதனர்க ளிருந்தநாடு
ஆசீர்ம மென்றுரைப்பார் வதீதமாண்பர்
பொருதென்றால் வீசுடைய காசிநாடு
பொங்கமுடன் தேவதா மூலங்கண்டார்
திருவிளையாம் விசாலாட்சி வம்பாள்பாதம்
தேசொளியின் சின்மயத்தை கண்டார்தாமே 602







கண்டாரே காசிவிசுவ நாதர்தம்மை   
கனமுடைய விசாலாட்சி யம்பாள்பாதம்
அண்டர்முனி தேவாதி தேவரெல்லாம்
அறியாத முன்னிருந்த கானமப்பா
தொண்டுமிகச் செய்தவர்க்கும் பலன்காணாமல்
தொல்லுவகை கண்டுமல்லோ காசிகாணார்
விண்டாரே யெனதைய ரசுவனியாந்தேவர்
விண்ணுலகில் காசிநகர் கண்டார்தாமே          603


முன்காசி மறைந்தது

நிலையான காசிநகர் தேவத்தானம்
நிட்களங்க மானதொரு காசிநாட்டை
சிலையான சிலையதுவாய் கோடிசங்கம்
சிற்பர்ரே மகாலிங்கம் லக்கோயில்லை
தலையான காசியென்ற தேவத்தானம்
தயாபரரே பிரளயங்கள் நேர்ந்தபோது
அலையான யலையதுவும் கடந்துமேதா
னப்பனே வேள்ளமதில் மறையலாச்சே                607


மறையான முன்காசி வடகாசியப்பா
வையகத்தில் பிரளயத்தில் முழுகலாச்சு
நிறையான சமுத்தரமும் பொங்கியல்லோ
தீர்க்கமுடன் காசிநகர் முழுகலாச்சு
வரைகோடி சித்தாதி முனிவர்நாதர்
மறைந்திருந்தார் பிரளயந் தன்னிலப்பா
குறையாமல் வெள்ளமது போனபின்பு
குருபரனார் முனிவர்க்ளும் பிழையுண்டாரே      608





பிழைத்துமே காயாதி கற்பத்தாலே
பேருலகில் பேருண்டாய் வாழ்ந்திருந்தார்
மழையான வெள்ளமது வடிந்தபின்பு
வானுலகு பதிதனையே காணலாச்சு
தழையான மரமுதலு செடிகள்பூண்டு
தயாபரரே மாநிலத்தில் தரிக்கலாச்சு
உழையான பூமியது சலமும்வற்றி
உத்தமனே தானிருக்க பார்த்திட்டாரே       609


சேரன் கட்டிய காசிவளம்

பார்த்தாரே கலியுகத்தில் மாண்பரெல்லாம்
பாருலகில் சேரனவர் செய்தகாசி









































..................................................................................      610  
தோடரும்.........இரண்டாம் பகுதி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக