திங்கள், 21 நவம்பர், 2011

சித்தர் மருத்துவ பிறமொழிச் சொற்களுக்கு செந்தமிழ் கலைச்சொற்கள்


         அறிவர் அறிவியலின் அன்பளிப்பு
         தமிழ் மருத்துவம்
                      பகுதி - 5 

                                                                                         
அசித்தர் குடில்

                                      அசித்தர்

சித்தர் மருத்துவ பிறமொழிச் சொற்களுக்கு செந்தமிழ் கலைச்சொற்கள்


அறிவர் பதிப்பகம். சென்னை

கைபேசி - 9382719282  

அக்ரூட்             -           உருப்பருப்பு,           படகரு
அங்குட்டம்          -    பெருவிரலளவு
அசோகு                 -    பிண்டி, பிண்டிமரம்,
செயலைமரம்
அண்டத்தைலம்            -           கோழி முட்டை நெய்மம்
அண்டவாதம்      -          விரையழற்சி
அட்சதை             –    மங்கல அரிசி
அத்தர்                      -           பூச்சாறை
அத்தி                                   -           எலும்பு
அத்துவைதம்      -           இரண்டன்மை
அதிமதுரம்                        -           சாற்றுப்பூடு
அதிரசம்                 -           பண்ணியாரம்
ப்பிரகம்             -           காக்கைப்பொன்
அபானம்                -           மலவாய், குதம், எருவாய்
அபான வாயு       -          கீழ்வளி, குசு
அபின்                      -           கசமத்தப்பிசின்
அமாவாசை       -           காருவா
அமிலம்                  -           புளிகம் 
அர்ச்சனை                        -           படையல், வழிபாடு, பூசனை
அரிதாரம்               -           பூச்சுப்பொன்துகள்,
மான்மதப்பொடி
அரோரூட்             -           அம்புக்கிழங்கு, கணைக்கிழங்கு,
கணைவேரி
அல்வா                   -           இன்களி,தீம்பசை
அன்னாசி              -           செந்தாழை
ஆகாசத்தாமரை -         வானத்தாமரை,காயத்தாமரை
ஆகாரம்           -      உணவு, சாப்பாடு
ஆசுத்துமா           -    இரைப்புநோய்
ஆத்மா              -           ஆதன், உயிர், ஆவி
ஆப்பிள்                  -           அரத்தி
யின்மெண்ட்  -           மருந்துநெய்
இங்கு                       -           பெருங்காயம்
இங்குலிங்கம்   -           சாதியிலங்கம்
இந்திரகோபம்   -           தம்பலபூச்சி
இந்திரியம்                        -           புலனுறுப்பு,விந்து
இந்துப்பு                 -           சிந்துப்பு
இலவங்கம்         -           கருவா, கருவமரம்
ஈசன்                             -           இறைவன், சிவன்,
அரசன்,குரு, மூத்தோன்
ஈசுரமூலி        -           பெருமருந்துக்கொடி
உருத்திராக்கம் -           கண்மணிக்காய்
உலோகம்             -           மாழை, மாழைத்தாது
உன்மத்தம்                        -           பித்தியக்காரன், பித்தன்,
வெறியன்
ஊதா                             -           செந்நீலம்
ஊதாமுள்ளி      -           செம்முள்ளி
ஏலம்                                    -           மணகம்
ஏலாதி                     -           மணகமுதலி
ஐசு                      -           பனிக்கட்டி
ஓமத்திராவகம் -           ஓமத்தீநீர்
ஔடதம்                -           மருந்து
ககனம்                    -           வான், காயம், மேலுலகு
கச்சுரை                  -           பேரீந்து
கசகசா                    -           கசமத்த விதை
கசாயம்                  -           கருக்கு, கியாழம்
கஞ்சா                     -           கஞ்சம், குல்லை,
கஞ்சங்குல்லை
கபாலம்                  -           தலை
கமலம்                    -           தாமரை
கர்ப்பம்               -    கரு, கருப்பம்
கராம்பு                    -           கருவம்பூ, கருவமரம்
கர்மம்,கன்மம்    -    கருமம்
கற்பூரம்              -    சூடன்,எரியணம்
காப்பி                      -    குளம்பி
காமாலை             -    மஞ்சநோய், மஞ்சள் பிணி
காயகற்பம்         -    ஆயுள் / வாழ்நாள்
நீட்டிப்பு மருந்து
காயசித்தி                        -    உடலை நீட்டத்திறம்
காயம்                -    உடல்
கெச்சக்காய்         -           கழற்சிக்காய்
கேரட்                      -           செம்மங்கி, இன்முள்ளங்கி,
செங்காய்                                                              
கொய்யா               -           காழ்ப்பழம்
கொப்பரை                        -           கொட்டான்காய்,
நெய்க்கொட்டான்
கோந்து                   -           பிசின்
கோமயம்              -           கோமூத்திரம்
கோரோசனை   -           ஆமணகம்
குக்குடம்                -           கோழி
குங்குமம்               -           செஞ்சாந்து, சாந்தகம்
குதிவாதம்                        -           குதி நரம்பிழுப்பு வலி
கும்பித்தல்                       -           மூச்சடக்குதல்
குல்கந்து                -           முளரிப்பச்சம்
குஃழ்டம்              -    குட்டம்
சங்கபுசுபம்                       -           சங்குப்பூ
சஞ்சீவி                  -           உயிர்ப்பு மருந்து
சண்டமாருதம்   -           பெருங்காற்று
சதமூலி,சதாவரி           -           தண்ணீர்விட்டான் கிழங்கு
சதவீரியம்             -           வெள்ளறுகு
சதை                      -    தசை
சப்தம்                 -    ஒலி, ஓசை
சப்ச்சா                    -           திருநீற்றுப்பச்சை விதை
சரீரம்                      -           உடல்
சவ்வரிசி               -           நெப்பபரிசி
சவ்வாது                -           புழுகு
சவுக்கு                    -           குச்சிரைமரம்
சவுக்காரம்                        -           துணி வழலை
சாம்பிராணி       -           சுராலை, தூவப்பொடி
சாமரபுசுபம்        -           கமுகு
சாரணம்                 -           அம்மையார் கூந்தல்
சிகிச்சை                -           பண்டுவம்
சிகை                                   -           முடி, மயிர்
சிங்கி                                   -           மான் கொம்பு
சித்தப்பிரமை    -           மனமயக்கம், பித்தியம்
சிந்தூரம்                -           செந்தூளத் தாது
சிலேபி                   -           தேன்குழல், தேன்முருக்கு
சிவலிங்கம்        -           சிவயிலங்கம்
சிவவாக்கியர்   -           சிவமொழியர்
சிறுபஞ்சமூலம்            -           சிற்றைவேர்
சின்முத்திரை     -           அறிவு முத்திரை
சீக்கு                         -           நோய்
சீத்தா                       -           நளிரம்பழம், செதிற்பழம்
சீதபேதி                  -           குளிரக் கழிச்சல்
சீதளம்                     -           குளுமை, குளிர்ச்சி
சீரணம்                    -           செரியாமை
சீனி                           -           சக்கரை
சுக்கிலம்                -           விந்து, வெண்மை
சுகவீனம்               -           நலக்கேடு
சுகாசனம்              -           இயல்பிருக்கை
சுகாதாரம்             -           நலவழி
சுத்தசலம்              -           தண்ணண்ணீர், தூயநீர்
சுத்தி                  -    தூய்மை, குற்றநீக்கம்
சுரசம்                       -           காய்ச்சினசாறு,கருக்குநீர்
சுவாசித்தல்        -           மூச்சுவிடுதல், உயிர்த்தல்
சுறுமாக்கல்         -           மைக்கல்
சூத்திரம்                 -           நூல்,நூற்பா
சூதகம்                     -           மாதவிடாய்,
தூய்மைக் காலம்
சூதம்                                    -           இதளியம்
சூப்பு                         -           சாற்றுக்குழம்பு, சாற்றம்
சூர்ணம்                   -           பொடி
சூரியகாந்தி          -           ஞாயிறுதிரும்பி,
ஞாயிறு வணங்கி
சூரியபுடம்             -           வெயிற்புடம்
சூரியநமசுகாரம்            -           கதிரவ வணக்கம்,
ஞாயிறு வணக்கம்
சேட்டுமம்,
     சிலேத்துமம்   –          கோழை,ஐயம்
சையோகம்        -           புணர்ச்சி, கலக்கை
சைவம்                   -           சிவம்
சொப்பனகலிதம் -        கனவு விந்தொழுக்கு
சோதிதம்               -           குருதி
சோதிடம்              -           கணியம்
சேமியா                 -           மாவிழை
சோடா                    -           உவர்க்காரம், உப்பகம்,
காலகம்
சோம்பு                   -           பெருஞ்சீரகம்
சௌசௌ              -           பச்சல், பச்சற்காய்
தசவாயு                 -           பதின்வளி
தண்டால்               -           ஊர்ந்தெழல்
தத்துவம்                -           மெய்யியல்
தம்பனம்                -           நிலைநிறுத்தல்
தமோகுணம்      -    முக்குணக்காரணி
{ காமம், வெகுளி, மயக்கம் }
தயிலம்                  -           நெய்மம், நெய்ம்மருந்து
தற்சனி                   -           சுட்டுவிரல்
தனியா                   -           கொத்துமல்லி,மல்லி விதை
தனுர்வாதம்       -           கீல்வலிப்பு நோய்
தாதி                         -           செவிலித்தாய்
தாம்பூலம்             -           தம்பலம்
தாரணை                -           ஒழுங்கு, மனநிலை நிறுத்த ஓகம்
திமிர்வாதம்       -           மெய்மரப்பு
திமிர்வாயு                        -           பக்கவலிப்பு
திரவம்                    -           நீர்மம்
திராட்சை              -           கொடிமுந்திரி
திராவகம்              -           எரிநீரம், தீநீர்
திரிகடுகம்                        -           முக்கடுகம்
திரிபம்                -           முப்பழம்
தியானம்                -           ஊழ்கம், சிந்தனை
தீட்சை                    -           நோன்பு, நோன்புறுதி
தீபனம்                    -           பசி
துத்தநாகம்                       -           வெள்ளடம்
துந்திரோகம்   -           பெருவயிறு
துரியம்             -           தன்வயமேனிலை
துவாலை       -           துணித்துண்டு
தூலதேகம்                -           பருவுடல்
தேகம்               -           உடம்பு
தேநீர்                            -           கொழுந்து நீர்,தழைநீர்
தேவதாரு          -    வண்டு கொல்லி,நெட்டிலங்கம்
தோசம்            -           குற்றம், தீவினை
நசியம்        -    மூக்கு மருந்து
நவநீதம்          -           வெண்ணெய்
நவபாடாணம்  -           தொண்ணச்சு
நவரசம்           -           தொண் சுவை
நவலோகம்    -           தொண்மாழை
நளபாகம்      -    நாணலன் சமையல்,
மீத்திறன் சமையல்
நாக பற்பம்    -    செவ்விதளியம் நீறு
நாகதெந்தி                 -           நேர்வாளம்
நாசி                   -           மூக்கு
நாடி                   -           கொப்பூழ், மான்மதம்
நாதம்                -           சினைமுட்டை
நாபிக்கொடி   -           கொப்பூழ்க்கொடி
நாபிரம்            -           விந்து                     
நேத்திரம்        -           கண்
பச்சைக் கற்பூரம்           -    மருந்தெரியணம்
பசு                      -           ஆ, மாடு, எருது
பஞ்சகமம்      -    ஐம்பூடு
பஞ்சகவ்வியம் -           ஆனைந்து
பஞ்சாமிர்தம்   -           ஐந்தமுதம்
பட்டாணி       -           உருளங்கடலை
பத்திரி              -           இலை
பப்பாளி           -           செங்கொழும்பை
பம்பளிமாசு    -           பேரின்னரத்தம்
பயித்தியம்    -           பித்து
பர்ப்பி               -           தெங்கினிமா
பரிகாரம்         -           கழுவாய், நீக்குகை,விலக்கு
பரிணாமம்                 -           திரிபாக்கம், படிமலர்ச்சி
பரிபாசை        -           குறியீடு, குழுஉக்குறி,
மறைபொருள்
பரியாயம்       -           ஒரு பொருட்பன்மொழி
பரீட்சை          -           ஆய்வு, தேர்வு
பவுத்திரம்      -           குறிக்கட்டி
பற்பம்               -           துகள், திருநூறு, நீறு
பறங்கிக்காய் -    வெண்பூசணி, பெரும்பூசணி
பச்சி           -           தோய்ச்சி. தோச்சி,
மாவேய்ச்சி, மாவேச்சி
பாண்டு        -    வெள்ளை,மஞ்சள் பிணி,
நீர்க்கோவை
பாதரசம்          -           இதளியம், இதள்
பாதாம்             -           கற்பழவிதை
பாயசம்            -           பாற்கன்னல்
பார்லி               -           பளிச்சரி,வாற்கோதுமை
பாரதம்             -           இதளியம், இதள்
பாரிசாதம்      -           பவழமல்லிகை
பால்கோவா   -           திரட்டுப்பால்
பாசாணம்       -           கல், நஞ்சு
பிசுதா               -           பசத்தம்
பித்தபாண்டு   -           இளைப்பு, மஞ்சநோய்
பித்தளை        -           மங்களை
பிப்பிலி           -           திப்பிலி
பிரசாதம்        -           படையலுணா, திருவுணா,
திருச்சோறு
பிரமசரியம்    -           ஓதல், திருவாழ்வு
பிரமம்              -           பெரும், முழுமுதற்பொருள்
பிரமேகம்       -           வெட்டைநோய்
பிரமை             -           மயக்கம், மருள்
பிரவாளம்      -           பவழம், பவளம்
பிரளயம்         -           ஊழிமுடிவு, பெருவெள்ளம்
பிராணவாயு   -           உயிர்வளி
பிருதிவி         -           புடவி, உலகம், நிலம்
பில்லி              -           வைப்பு, சூழியம்
பிலீகம்            -           மண்ணீரல்
பிளாசுதிரி      -           மருந்துபற்று, பற்றத்துணி
பிளேக்கு         -           கொள்ளைவாரி
பீங்கான்          -           வழைக்கலம், வழைக்கான்
பீசம்                   -           விதை, மூலம்
பீனிசம்            -           உளைச்சளி
புதன்                             -           அறிவன்
புதினா              -           ஈயெச்சக் கீரை.
பூரம்                  -           எரியணம், பளிதம்
பூராசக்கரை   -           பழுப்புச் சக்கரை
பூரி                     -           பூதி, மாப்பூதி
பேரிக்காய்                 -           நீரிக்காய்  
போதி               -           அரசமரம்
போளி              -           கோந்தினியாரம்
மகரந்தம்        -           பூத்தாது, மலர்த்தாது, பூத்தேன்
மகோதரம்                 -           பெருவயிறு
மச்சை              -           மஞ்சட்சோறு, எலும்புச் சோறு,  
ஞ்சி, எலும்பு மூளை
மசால்              -    கறிக்கூட்டு, மசியம்
மஞ்சட்காமாலை -   மஞ்சனோய்
மண்டூரம்        -           இரும்புக்கிட்டம்
மணிபூரம்       -           கொப்பூழ்
மணிலாக்
    கொட்டை -    நிலக்கடலை,வேர்க்கடலை
மதுப்பிரமேகம் -      நீரிழிவு
மந்தம்                 -           மெதுமை, செரியாமை
மந்தாக்கினி   -           பசியின்மை
மரணம்            -           சாவு, இறப்பு
மரீசம்              -           மிளகு
மல்கோவா    -           பைந்தசைமா, பைங்கெழுமா
மலையேலம்  -           பெருமணகம், மலைமணகம்
மனோசிலை   -           செம்மஞ்சுள்ளி
மாகதி              -           திப்பிலி
மாகந்தி           -           நெல்லி
மாங்கிசம்      -           இறைச்சி, தசை, ஊன்
மாதுளை        -           பல்லணிப்பழம்
மாமிசம்          -           இறைச்சி, தசை, ஊன்
மிரி                      -           நரிவிரைக்கிழங்கு
மிருத்தியுஞ்சயம் -   சாநீக்கமந்திரம்
மிருதசஞ்சீவி -       உயிர்மீட்பு மருந்து
மிருதாரசிங்கி       அழுக்கீயம்,  ஈயம்
முடக்குவாதம் -      முடக்குவலிப்பு
மூத்திராதிசாரம்     -     நீரிழிவு
மூர்ச்சை         -           நினைவிழப்பு
மேகக்காங்கை      -    வெட்டைநோய், கணைச்சூடு
மேகம்              -           வெள்ளை பிணி
மே வித்திதி      -     பிளவைநோய்
மேதசு               -           கொழுப்பு
மைசூர்பாகு    -           கண்டப்பாகு
மைதா              -           மைதம், மைதமா
மைதுனம்       -           புணர்ச்சி, கலவி
மொலான்      -           அரத்திப்பூசனி
யவனாசலம்   -           வெடியுப்பு
யாகம்               -           வேள்வி, வழிபாடு
யுனானி           -           சேணியம்
யோகம்           -           ஓகம்
யோகாசனம்   -           ஓகவிருக்கை
யோனி            -           பெண்குறி, கருப்பை
ரசகுல்லா      -           சுவைக்கோளி
ரசதம்                -           வெள்ளி     
ரசதாளி           -           தேங்கொழு வாழை,
தேங்கொழுவம்         
ரசம்                   -           சாறு
ரசாயனம்       -           வேதியல்
ரணம்                -           புண், புரைக்காயம்
ரணவைத்தியம்      -     அறுவைப் பண்டுவம்
ரத்தகாசம்      -           குருதியுமட்டல், குருதியுமிழ்வு
ரத்தபித்தரோகம் -    குருதிப்பித்தநோய்
ரத்தினம்         -           அரத்தினம், மதி
ரவை                             -           குறுநொய்
ராகி                   -           கேழ்வரகு
ராத்தல்            -           40 துலையம்
ருத்திரசடை   -           திருநீற்றுப்பச்சை
ருமானி           -           செம்மா, செம்மாம்பழம்
ரொட்டி            -           செவப்பம்
ரோசா              -           முளரி
லவணம்         -           உப்பு
வகாரவுப்பு                -           கல்லுப்பு
வங்கம்            -           ஈயம்
வர்மம்              -           மருமம்
வராடி (க)        -           பலகறை
லிங்கம்           -           இலங்கம், குறி, ஆண்குறி,  
அடையாளம்     
லேகியம்        -           இளகியம், நக்கியம்
வன்னி             -           நெருப்பு
வாகடம்          -           மருத்துவநூல்., பண்டுவநூல்            
வாந்தி, பேதி   -           கக்கல், கழிச்சல்
வாய்வு             -           காற்று, வளிப்பு, காற்றுப்பிடிப்பு
விப்புருதி       -           புண்
விரோசனம்    -           வயிற்றுப்போக்கு
விலாமிச்சை -           எற்பழம், மஞ்சைப்பழம்
வைடூரியம்    -           ஒள்ளூரியம்



கருவி நூற்கள்
அயற்சொல் அகராதி  -  ப,அருளி
மலை (வாகடம்) அகராதி