செவ்வாய், 25 அக்டோபர், 2011


அறிவர் அறிவியலின் அன்பளிப்பு

   தமிழ் மருத்துவம்

  பகுதி - 4 
நமது பண்பாட்டு உணவுகள்
                                  எளிய செய்முறைகள்


                     அசித்தர் சீலையம்மாள்


                பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியில்
                               நமது பண்பாட்டு உணவுத் திருவிழா வெளியீடு

 நமது பண்பாட்டு உணவுகள்
       எளிய செய்முறைகள்


  அசித்தர் சீலையம்மாள்


பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியில்
நமது பண்பாட்டு உணவுத் திருவிழா வெளியீடு
 
           அறிவர் பதிப்பகம்
9382719282




நமது தமிழே நமக்கு வளம்! நமது உணவே நமக்கு நலம்!
நமது பண்பாட்டு உணவுகள்
எளிய செய்முறைகள்
அன்பு தமிழ் உறவுகளே!
நமது உயிர் இயக்கம் நமது உடல் நலத்தைச் சார்ந்துள்ளது.  உடல் நலமோ நமது உணவுப் பழக்கத்தாலும் வாழ்க்கை முறையாலும் அமைகிறது.
அறிவியல் வளர்ச்சியும், அயலவரைப் போற்றி, அவரைப் போலச் செய்யும் போக்கும், சோம்பல் மன நிலையும் நமது வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் மாற்றி விட்டன.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், உடனடி (iளேவயவே) உணவுகள், விரைவு (கயளவ) உணவுகள், செய்து அடைக்கப்பட்ட (யீயஉமநன) உணவுகள், பல்வகை குடிப்புகள் (னசiமேள) என நமக்குக் கேடு செய்வன எல்லாம் நமது உணவாய், நாகரிகமாய் நமது வீடுகளில் புகுந்துவிட்டன.
நமது இல்லங்களில் பெரியவர்களால் செய்யப்பட்ட பலவகை உணவு வகைகளும், பண்ணியங்களும், குடிப்புகளும் மறைந்து போயின. வீட்டு மருத்துவ மனையாக இருந்த அஞ்சரைப் பெட்டி காணாமல் போனது.
இவற்றின் விளைவு இன்று பலருக்கும் நீரிழிவு நோய், சிறுநீரகக் கல், மாரடைப்பு, குறை அழுத்தம், வயிற்றுப்புண் என, பல நோய்களும் பிணிகளும் மிகுந்துவிட்டன. சிறுவர்களும் உடல் பருமனுக்கு ஆட்படுகின்றனர்.
இவற்றிலிருந்து நாமும் நம்மவர்களும் காக்கப்பட வேண்டும்.
விழுந்த இடத்திலே எழுவது போல, தொலைந்த இடத்திலே தேடிக் கண்டு பிடிப்பதை போல, நாம் இழந்தவற்றையெல்லாம் உரிய முறையிலே மீட்டெடுக்க வேண்டும்.
இன்று நமது உணவும் பண்பாட்டுக் கூறுகளும் வீட்டு விழாக்களிலும் சடங்குகளிலும் ஒடுங்கிவிட்டன. அவற்றை வாழ்வியலாய், உணவுப் பழக்கமாய் மீட்டெடுக்க வேண்டும்.  அந்த வகையில் இது எங்களின் சிறு முயற்சி.
இதை ஆக்கித் தந்த சித்தர் மருத்துவர் அசித்தர் - சீலையம்மாள் இணையர் போற்றுதலுக்கு உரியவர்கள்.
இதை பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி நடத்தும் நமது பண்பாட்டு உணவுத் திருவிழாவில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
வாருங்கள், நமது பண்பாட்டை மீட்டெடுப்போம். நாம் நாமாய் உயர்ந்து நிற்போம்.

தி.பி. 2040கும்பம் 17                                                 அன்புடன்
(1-3-2009)                                              (வெற்றிச்செழியன்)



பருப்பு, காய்கறி இட்டளி
பாசிப்பருப்பு    -       ஒரு குவளை
கடலை பருப்பு -       ஒரு குவளை
புழுங்கல் அரிசி -       கால் குவளை
இவற்றை இரண்டு மணிநேரம் ஊறவைத்து இட்டளி மாவாக அரைத்துக் கொள்ளவும்.
தேவையிருப்பின் இந்த மாவில் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
மெல்லிய அவரை (பீன்சு), உருளங்கடலை (பட்டானி), உருளை கிழங்கு, இன் முள்ளங்கி  (கேரட்)  இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகுத் தூள்   -       தேவைக்கேற்ப
வெங்காயம்    -       பெரியது ஒன்று
கறிவேப்பிலை -       சிறிது
கொத்துமல்லி -       சிறிது
சீரகம்          -       ஒரு சிறுகரண்டி
உப்பு, எண்ணெய் -      தேவைக்கேற்ப
சட்டியில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், மிளகுத் தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி, தேவையான உப்பு சேர்த்து வதக்கி, இதனை இட்டளி மாவில் கலந்து இட்டளி தட்டில் ஊற்றி ஆவியில் வைத்து எடுத்து வெந்ததும், இதனுடன் கொததுமல்லி துவையல் வைத்து சாப்பிடலாம்.
சக்கரை பிணி உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.  குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

நெய்ப்பரிசி (சவ்வரிசி) இட்டளி
புழுங்கல் அரிசி         -       கால் குவளை
பச்சரிசி                 -       கால் குவளை
உ. பருப்பு              -       ஒரு குவளை
நெய்ப்பரிசி             -       கால் குவளை
இவற்றை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் சிறிய அளவு தயிர் சேர்த்து உடனடியாக இட்டளி செய்து கொள்ளலாம்.

பருப்பு இட்டளி
உளுத்தம் பருப்பு - 200 அயிரை (கிராம்)
பாசிப்பயறு - 200 அயிரை
எடுத்து தண்ணீரில் மூன்று மணிநேரம் ஊறவைத்து, அரைத்து எடுத்துக் கொள்ளவும். கைப்பிடி அளவு கடலைப் பருப்பை மூன்று மணிநேரம் ஊறவைத்து அரைத்த மாவுடன் சேர்த்து பிசையவும்.  தேவையான அளவு உப்பும் மிளகுத் தூளும் சேர்த்து இட்டளி சுடவும்.
இது சக்கரைப் பிணியாளர்களுக்கு ஏற்ற உணவு.
அடை / தோயை வகை
1.    கேழ்வரகு மாவு (அ) அரிசி மாவு  (அ)  சோள மாவு (அ) குச்சிக்கிழங்கு மாவு
2.  முடக்கறுத்தான் (அ) தூதுவளை (அ) முசுமுசுக்கை (அ) வல்லாரை கீரை ஒரு கைப்பிடி
இதில் ஏதாவது ஒரு மாவை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். ஏதாவது ஒரு கீரை வகையை எடுத்துக் கழுவி நன்றாக சிறு சிறு துண்டுகளாக அரிந்து, மாவுடன் பிசைந்து கொள்ளவும். மிளகுத் தூள், ப.மிளகாய், சிறு சிறு துண்டாக நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து சூடாக சுட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

முடக்கறுத்தான், தூதுவேளை, முசுமுசுக்கை, வல்லாரை கீரை தோயை, அடை
இவற்றில் ஏதேனும் ஒரு கீரை - ஒரு கைப்பிடி
தோயை மாவு இருந்தால் கீரையை நன்றாக இரண்டு காய்ந்த மிளகாய் (அ) ப.மிளகாய் (அ) ஐந்து மிளகு சேர்த்து அரைத்து அந்த நேரத்துக்கு சுடுகிற மாவில் மட்டும் கலந்து சுட்டு சாப்பிவும்தற்கு தேங்காய் அல்லது வெங்காயத் துவையல் நன்றாக ருக்கும்.

பருப்பு அடை தோயை
மூக்குக் கடலை -  250 யிரை (கிராம்).  ரவே ஊறவைத்து விவும்
வெங்காயம்    -  பெரியது ரண்டு
.மிளகாய்               -   தேவைக்கேற்ப
ஏதாவது ஒரு மூலிகைக் கீரை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை, கொத்துமல்லி

மூக்குக் கடலையை நன்றாக கழுவி அரைத்துக் கொள்ளவும்எல்லாவற்றையும் சிறு சிறு துண்டு களாக நறுக்கி அதனுடன் கலந்து தேவைக்கு ஏற்ப உப்பு கலந்து கொட்டி பதமாக அரைத்து அடை தட்டிக் கொள்ளவும். தோயையாக சாப்பிடுபவர்கள் அதனுடன் யிர் சிறிது சேர்த்து செய்து கொள்ளவும்பிள்ளைகளுக்கு கொடுப்பதாக ருந்தால் ந்த கலவையை வைத்து வடையாகவும் சுட்டுக் கொடுக்கலாம்.

முடக்கறுத்தான் துவையல்
முடக்கறுத்தான்                - ஒரு கைப்பிடி வதக்கிக் கொள்ளவும்.
 காய்ந்த  வற்றல் மிளகாய்
பூண்டு  - ஐந்து பற்கள்புளி   
மல்லி விதைசீரகம், மிளகு, உ.பருப்பு இவற்றை ஒவ்வொன்றும் ஒரு சிறு  கரண்டி வீதம் எடுத்து பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவுடன் அதனுடன் முடக்கறுத்தான், புளி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளவும். 
குறிப்பு  :  புளிக்கு மாற்றாக புளி இலை கிடைத்தால் பயன்படுத்தலாம். 
துவையல் அனைத்தையும் தாளிக்க வேண்டும் என்றால், சிறிதளவு நெய் சேர்த்து  சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பயன்  : முடக்கறுத்தான் சாற்றுக்குச் சொன்னது பொருந்தும்.

தூதுவேளை துவையல்
தூதுவேளை - ஒரு கைப்பிடி
வெங்காயம் - பெரியது 1
இரண்டையும் சிறிதளவு நெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
மல்லி விதை, சீரகம் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
புளி -ஒரு கொட்டை, தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அரைத்துக் கொள்ளவும்
பயன் : ளி, மண்டையில் நீரேற்றம் முதலியவற்றை குணப்படுத்தும். நோய் திர்ப்பு ஆற்றல் தரும்.

பீர்க்கன்காய் தோல் துவையல்
பீர்க்கன்காய் தோல் - ஒரு கைப்பிடி
வறள் மிளகாய், . பருப்பு, மல்லி விதை, சீரகம் வற்றைப் பொடி செய்து கொள்ளவும். ஒரு கொட்டை அளவு புளி, ஐந்து பூண்டு பற்கள், தேவையான அளவு உப்பு  அனைத்தையும் சேர்த்து மைய அரைத்துக் கொள்வும்.

கத்தரிக்காய் துவையல்
கத்தரிக்காய் - ரண்டு, எண்ணெயில் பொறித்து எடுத்துக் கொள்ளவும். புளி, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, தேவை யான அளவு உப்பு வற்றை ஒன்று கூட்டி அரைக்கவும்,
குறிப்பு  : வியில் வேக வைத்த கத்திரியையும் எடுத்துக் கொள்ளலாம்.

மாங்காய் துவையல்
மாங்காய் - 1.
வறள் மிளகாய், சீரகம், மிளகு வற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்
பயன் : பிள்ளைகளின் சாப்பிடும் ஆவலைத் தூண்டும்

வெண்டைக்காய் துவையல்
வெண்டைக்காய் - நான்கு எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்.
புளி, வறள் மிளகாய், மல்லிவிதை, சீரகம், மிளகு வற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கொத்துமல்லி துவையல்
கொத்துமல்லி, புளி, தேங்காய்வில்லை - ஒன்று, வறள் மிளகாய், உளுத்தம் பருப்பு வற்றை வறுத்து அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
பயன் : பித்தம் நீங்கும், உடல் சூடு ணியும், கல்லீரலுக்கு வலு சேர்க்கும்.

 ஈயெச்சக்கீரை  (புதினா)  துவையல்
ஈயெச்சக்கீரை    -               ஒரு கட்டு
நெய்யில் வதக்கிக் கொள்ளவும்
கறிவேப்பிலை   -               ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி     -               ஒரு கட்டு
ஞ்சி    -               சிறிதளவு
பூணடு   -               ஐந்து பற்கள்
. மிளகாய் ()
காய்ந்த / வறள் மிளகாய் - தேவைக்கு ஏற்ப
புளி        -              நெல்லிக்காய் அளவு
தேங்காய் வில்லை           -              ரண்டு
வெங்காயம்         -              பெரியது ஒன்று,
                                எண்ணெயில் வதக்கி
உளுத்தம் பருப்பு                -              ஒரு சிறுகரண்டி சேர்த்து
எல்லாவற்றையும் நன்றாக அரைத்த பின், வறுக்கும் சட்டியில் ஒரு சிறுகரண்டி நெய் வார்த்து  சீரகம் கொத்தமல்லி லை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, கீரை கலவையைப் போட்டு கிளறி, நீர் நன்றாக சுண்டியதும் றக்கிக் கொள்ளவும்.
             
கொள் துவையல்
கொள் - ஒரு பெரி கரண்டி அளவு எடுத்து வறுத்துக் கொள்ளவும்
புளி - நெல்லிக்காய் அளவு
வறள் மிளகாய், சீரகம், மிளகு, உளுத்தம் பருப்பு - வறுத்து பொடி செய்து கொள்ளவும்
பூண்டு - ஐந்து பற்கள்
உப்பு - தேவையான அளவு
எல்லாவற்றையும் அரைத்து சீரகம், . பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைத் தாளித்து சேர்த்துக் கொள்ளவும்

பூக்கள் கூட்டு
தாமரைப்பூ                  -  சிறிது
முளரி (ரோசா- சிறிது
ஆவாரம் பூ                  -  சிறிது
காய்ந்த மிளகாய்சீரகம், கறிவேப்பிலை, ஞ்சி - நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல், உப்பு, நல்லெண்ணெய்
சட்டியில்  ஒரு சிறு  கரண்டி எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மைய அரைத்த விழுதை தில் போட்டு வதக்கி சிறிய அளவு நீர் சேர்த்து அதனுடன்,  ஆவாரம்பூ, தாமரை பூ, முளரி பூக்களையும் சேர்த்து வதக்கவும். பின் அதனுடன் தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுத்து சாப்பிடலாம்.

ஆவாரம் பூ கூட்டு
கடலை பருப்பு    -   கால் குவளை
வெங்காயம்         -   பெரியது ஒன்று
இஞ்சி                    -   சிறிது
பூண்டு ஐந்து பற்கள் அரைத்த விழுது
கறிவேப்நிலை, கொத்துமல்ஸீ - சிறு துண்டாக நறுக்கியது
மிளகாய் வற்றல், சீரகம், மிளகு, மல்லி விதை - வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்
உப்பு, எண்ணெய்   -  தேவையான அளவு
ஆவாரம் பூ - 100 அயிரை (கிராம்) தூய்மை செய்தது.
சட்டியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து, நீர் ஊற்றி கடலை பருப்பு சேர்த்து நன்றாக மைய வேக வைக்கவும்அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி வறுத்து வைத்த பொடி சேர்த்து கிளறி அதனுடன் ஆவாரம் பூ 100 யிரை சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ளவும்.

கரிசலாங்கண்ணி கூட்டு
கரிசலாங்கண்ணி கீரை  - ஒரு கைப்பிடி
சிறுபருப்பு                                      - 50 அயிரை
பூண்டு                                     - பத்து பற்கள்
சிறிது  உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் இவற்றை வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
சிறு பருப்பை மைய வேகவைத்த பிறகு கரிசலாங்கண்ணி கீரை சேர்த்து வேகவைத்து, பின் பொடித்து வைத்ததை அதில் கலந்து நன்றாக எல்லாம் சேர்ந்து கொதி வந்ததும், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து இறக்கிக் கொள்ளவும்பின்  ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, . பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து தாளித்து அதில் கலந்து கொள்ளவும்.



வல்லாரைக் கீரை பொரியல்
சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, . பருப்பு, காய்ந்த லீளகாய், வெங்காயம், வல்லாரை கீரை சேர்த்துக் கிளறவும்ஞிறிதாக தண்ணீர் தெளிக்கவும்வெந்ததும் மஞ்சள் தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு, வேகவைத்து மசித்தது. பருப்பு, தேங்காய் துருவல் போட்டுக் கிளறி எடுத்துக் கொள்ளவும்.

செம்பரத்தைப்பூ பச்சடி
செம்பரத்தைப் பூ                -       2
இன்முள்ளங்கி (கேரட்)         -       2
முள்ளங்கி                      -       1             
வெள்ளரிக்காய்                         -       1
தக்காளி                                -       1
வெங்காயம்                    -       1
முட்டைக்கீரை (கோசு)செங்கிழங்கு (பீட்ரூட்) - சிறிதளவு
அனைத்தையும் பொடியாக நறுக்கி தயிர் சேர்த்து, மிளகுத் தூள், எலுமிச்சம் பழச்சாறு சில சொட்டுகள், தேவையான அளவு உப்பு கலந்து உட்கொள்ளவும்.

கண்டந்திப்பிலி  மிளகுச் சாறம்
கண்டந்திப்பிரி, சதகுப்பைமல்லி விதை (தனியா) மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு ஞிறு கரண்டி அளவு எடுத்து, வறுத்து பொடி செய்து இதனுடன் 10 பெரிய பூண்டு பற்கள் சேர்த்து அரைக்கவும்.  பிறகு இரும்பு சட்டியில் நல்லெண்ணெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, கொத்துமல்லி அரைத்த விழுது, புளி நீர், தக்காளி பெரியது இரண்டு சேர்த்து அனைத்தும் நன்றாக கொதி வந்ததும் பருப்பு நீர்  சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.  
10 பூண்டு  பற்களையும், முடக்கறுத்தானையும் வதக்கி எல்லா வற்றையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி, சீரகம் வெடித் ததும், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புளி கரைத்த நீர், தக்காளி, அரைத்த அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
பயன் : உடல் வலி, மூட்டு வலி, தசை பிடிப்பு, வளி அல்லது காற்று சிக்கலுக்கு நல்லது.

வெந்தய சாறம்
சட்டியில் எண்ணெய் ஊற்றி . பருப்பு, பெருங்காயம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்து மல்லி சேர்த்து வதக்கவும்எலுமிச்சை பழ அளவு புளியை ஊறவைத்து வடிகட்டிய நீர், அரிசி கழுவிய நீர், மிளகாய்த் தூள், வெந்தயப் பொடி ஒரு தேக்கரண்டி போட்டு கொதி வந்ததும், கொத்து மல்லி போட்டு உப்பு போட்டு இறக்கிக் கொள்ளவும்.


குளிர் குடிப்புகள்

1.             வெள்ளரிக்காய்          - இரண்டு
மாங்காய் இஞ்சி - ஒரு சிறு துண்டு,
இரண்டையும் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை பழச்சாறு - ஓரிரு சொட்டு
உப்பு - வேண்டும் என்றால் பயன்படுத்திக் கொள்ளவும்
குளிர்ந்த பானை நீரை சேர்த்து அருந்தலாம்.

2.             நன்னாரிவெட்டி வேர் - சம அளவு போட்டு இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, பனைவெல்லம் சேர்த்து குடிக்கவும்.

3.      கற்றாழையை  உரித்து அதிலுள்ள சோற்றை எடுத்து, நீரில் கழுவி, மசித்து அதனுடன் தண்ணீர், பனை வெல்லம் கலந்து குடிக்கலாம்.

4.             முந்தைய நாள்  இரவு சோற்றில் ஒரு சிறு கரண்டி  வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் வயிறு குளுமையடையும்.  வயிற்றுப்புண் தீரும்.

5.             தேன், எலுமிச்சை சாறு  ஒவ்வொன்றும்  அரை சிறுகரண்டி சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க ஒற்றைத் தலைவலி தீரும்.

6.  உடல் சூடு, தாகம் தணியக் குடிப்பான்
நன்னாளரி விலாமிச்ச வேர், கருங்காலிப்பட்டை, சந்தனச் சிராய்
இவற்றை சமஅளவு சேர்த்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பனை வெல்லம், தேன் கலந்து குடிக்கலாம்.
7.  குளிர் குடிப்பு
கருந்துளசி விதையை இரண்டு மணிநேரம் நீரில் ஊற வைத்து பின் அதில் பனைவெல்லம் (அ) தேன் கலந்து குடிக்கலாம்.

சூடான குடிப்புகள்
1.       ஆவாரை
தழை நீர் வகையில் ஆவாரையும் ஒன்று. குளம்பி (காப்பி) கொட்டையை கொதிக்க வைப்பதற்கு மாறாகஒரு சிறு கரண்டி ஆவாரைப் பொடியும், ஒரு குவளை தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி தேவைக்கு ஏற்ப பாலில் பனை வெல்லம், தேன் கலந்து  குடிக்கலாம்.  {இதை நான்கு பேர் குடிக்கலாம்}

இதனை நாள்தோறும் காலை, மாலை குடித்து வர சக்கரை பிணி தீரும். ஆவாரை கண்டவரை சாவு நெருக்குவதில்லை.

2.      தாமரைப்பூ
தாமரை + செம்பரத்தை + மருதம்பட்டை, சுக்கு, மிளகு, ஏலம், தான்றிக்காய், கருவாப்பட்டை, துளசி இலை அனைத்தையும் நிழலில் உலர்த்தி காய வைத்து, நன்றாக பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறு கரண்டி போட்டு தேவையான நீர் சேர்த்து கொதிக்க வைத்துப் பனை வெல்லம் கலந்து குடிக்கலாம்.
பயன்கள் : இதயத்துக்கு இதமளிக்கும், பட படப்பு, மூச்சுத் திணறல், குருதியில் மிகுந்த கொழுப்பு, குருதி கொதிப்பு, இதயநோய் குணமாகும்.
{குடிப்புக்கு சித்தர் மருத்துவத்தில் கருக்கு நீர் எனும் சொல் வழக்கத்தில் இருக்கிறது. இதனையே வடமொழியில் கசாயம், கியாழம் என்பர்}
19

3. தொண்டை புகைச்சல், இருமல் குடிப்பு
சாற்றுப்பூடு (அதிமதுரம்)- 100 அயிரை (கிராம்)
ணிப்பிலி - 50 அயிரை
சிற்றரத்தை - 25 அயிரை இவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.

இவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும்.
19


  
ந்தப் பொடியை அரை சிறுகரண்டி அளவு போட்டு குடிக்கவும்.
ந்தப் பொடியை அரை சிறுகரண்டி அளவு போட்டு குடிக்கவும்
4.  அடுக்குத் தும்மல் குடிப்பு
ஈயெச்சக்கீரை, துளசி, ரண்டையும் சம அளவு கலந்து குடிப்பான் செய்து குடிக்கவும்.

5.   மூளை, குடல் தூய்மை குடிப்பு
கொட்டை கரந்தை லையைப் பறித்து நிலில் காயவைத்து, அரைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.   தனை காலை, மாலை ருவேளை குடித்து வர மூளைக்கும், குடலுக்கும் மிவும் நல்லது.

6.   நீரிழிவுக் குடிப்பான்
சிறுகுறிஞ்சான் -               50 யிரை (கிராம்)
நாவற்கொட்டை                -               50 யிரை
வெந்தயம்            -               50 யிரை
பொடுகுதலை     -               50 யிரை
கடுக்காய், நெல்லிக்காய்,
தான்றிக்காய்      - 50 யிரை
நிலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளவும்கால் சிறுகரண்டி அளவு  போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.

7. சிறுவர்க்கு வல்லாரை நினைவாற்றல், சுறுசுறுப்பு குடிப்பான்
வல்லாரை           -               199 யிரை (கிராம்)
மருதம்பட்டை    -               50 யிரை
துளசி     -               50 யிரை
சாற்றுப்பூடு          -               50 யிரை
கருவாப்பட்டை -               50 யிரை
தாளி லை      -               50 யிரை
நிலில் உலர்த்தி காயவைத்து அரைத்து பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும்.
கால் அளவு சிறுகரண்டி ரண்டு வேளைகள் உட்கொள்ளவும்.

8. கால்கை, உடல் நீர்க் கட்டு, வீக்கத்திற்கு குடிப்பு
பத்து மூலம் - வில்வ வேர், முன்னை வேர், பெருவாகை வேர், குமிழ் வேர், பாதிரிவேர், மூவிலை வேர், ரிலை வேர், முள்ளுக்கத்திரி வேர், கண்டங் கத்திரி வேர், நெருஞ்சில்,நீர் முள்ளி, வாழைப்பூ, மூக்கிரட்டை.
தனை நிலில் உலர்த்தி காயவைத்து கருக்கு நீர் செய்து வடிகட்டி குடிக்கவும்உடல் லி, ருமல், ரைப்பு, ளி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

9.     அமுக்குரா குடிப்பு
கருவாப்பூ (இலவங்கம்) -       10அயிரை (கிராம்)
சிறு நாகப்பூ    -       20 அயிரை
சிறுமணகம் (ஏலக்காய்) -       40 அயிரை
மிளகு  -       80 அயிரை
திப்பிலி -       160 அயிரை
சுக்கு   -       320 அயிரை
நாட்டு அமுக்குரா       -       640 அயிரை
பனை சக்கரை  -       1280 அயிரை
ஒரு நாளைக்கு 5  அயிரை  அளவு நீரில் போட்டு காய்ச்சிக் குடிக்கவும்.
தீரும் பிணிகள் : எட்டுவகை வயிற்றுப்புண்கள், வெட்டை, விக்கல் நீங்கும்.
மஞ்சள் பிணி (காமாலை), வந்தவர்க்கு ஊட்டமும் வலுவும் அளிக்கும்.  இரவு உணவுக்குப்பின் குடித்தால் நல்லுறக்கம் கிடைக்கும்.

ஊறுகாய்கள்

1.  மாங்காய் ஞ்சி ஊறுகாய்
மாங்காய் ஞ்சி  தோல் சீவி நறுக்கியது  - கால் கிலோ
உப்பு -  தேவையான அளவு
யிர்  -  கிழங்கு மூழ்கும் வரை
மிளகுத் தூள்
வற்றை ஒன்றாகக் கலந்து புட்டிலில் போட்டு வைக்கவும்மூன்று நாட்களுக்குப் பின் எடுத்து வெய்யிலில் காயவைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்நாள்தோறும் காய வைக்கவும்.

2. ன்முள்ளங்கி ஊறுகாய்
ன்முள்ளங்கி (கேரட்)  - பெரியது 1
மிளகாய் தூள்     - கால் சிறுகரண்டி
உப்பு                       - தேவையான அளவு
எண்ணெய்           - ஒரு சிறுகரண்டி
கடுகு                     - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - ரண்டு சொட்டு
சட்டியில் எண்ணெய் ஊற்றி, தில் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தூள்அதற்கு பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய ன்முள்ளங்கியைச் சேர்த்து பாதியாக வெந்ததும், அதனுடன் உப்பு சேர்த்து கிளறி றக்கிக் கொள்ளவும்அதன்பின் எலுமிச்சை பழச்சாறு ஊற்றி கிளறி பயன்படுத்திக் கொள்ளலாம்து உடனடி பயன்பாட்டிற்காக.

குழம்புப் பொடி
மிளகாய் வற்றல்               -               நான்கு குவளை
து. பருப்பு                      -               அரை குவளை
. பருப்பு                       -               கால் குவளை
.பருப்பு                       -               அரை குவளை
மல்லி                    -               ஒரு குவளை
மிளகு                    -               மூன்று சிறு கரண்டி
மஞ்சள் தூள்       -               ஒரு சிறு கரண்டி
வெந்தயம்                    -               நான்கு சிறு கரண்டி
உப்பு                               -               தேவையான அளவு
சட்டியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு ஒவ்வொரு பொருளையும் னித்தனியே வறுக்கவும்பிறகு ஒவ்வொன்றையும் அரைத்து கலந்து கொள்ளவும்தனை சோறு, ட்டளி, தோயை ஆகியவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.

கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை   -  ஒரு குவளை
. பருப்பு              -  நான்கு சிறு கரண்டி
. பருப்பு               -  நான்கு சிறு  கரண்டி
மிளகாய் வற்றல்               -  நான்கு
வற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
புளி                                        - சிறிது
தேங்காய் துருவல்            - அரை குவளை
உப்பு                                       - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
ஒன்றன் பின் ஒன்றாக எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்தனை சோறு, ட்டளி, தோயை  உடன் வைத்து உட்கொள்ளலாம்.


வேப்பம் பூப் பொடி
வேப்பம் பூ            -               ஒரு குவளை
மலலிவிதை       -               ஒரு குவளை
மிளகாய் வற்றால்             -               10 நிரை (கிராம்)
மிளகு    -               10 யிரை
காயம்   -               சிறிது
உப்பு       -               தேவையான அளவு
எல்லாவற்றையும் வறுத்து, ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்தனை சோறுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்பித்தம் அமைதி பெறும்யிற்றிலுள்ள தீய நுண்ணுயிர்கள் தொலையும்.

பொட்டுக்கடலைப் பொடி
பொட்டுக்கடலை               -               ஒரு குவளை
மிளகாய் வற்றல்               -               பத்து
உப்பு       -               நான்கு சிறு கரண்டி
தேங்காய் துருவல்            -               அரை குவளை
புளி        -               சிறிது
பூண்டு   -               பத்து பற்கள்
முதலில் பொட்டுக் கடலையை டித்து சல்லடையில் போட்டு நன்கு லித்துக் கொள்ளவும்உரலில் மிளகாய் வற்றல், உப்பு, புளியை டித்து பின் தேங்காய் துருவலையும் சேர்த்து இடிக்கவும்.  பின் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். சோற்றுடன் பிசைந்து சாப்பிட இது பயன்படும்.

எள்பொடி
வெள்ளை எள்  -       ஒரு குவளை
                                வறுத்துக் கொள்ளவும்
லீளகாய் வற்றல்       -       நான்கு
மிளகு -       ஒரு  சிறு கரண்டி
காயம் -       சிறிது
உப்பு   -       இரண்டு சிறு கரண்டி
இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக அரைத்து பொடி செய்து சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம். 
இந்த கலவையை நீர் விட்டு மைய அரைத்தால் அது எள் துவையல் ஆகும்.  எள் துவையலை கஞ்சியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

அவல் சோறு
அவல்    - நான்கு குவளை
பச்சை உருளங்கடலை
(பட்டாணி)           - நான்கு குவளை
உருளைக்கிழங்கு துருவல்  - ஒரு குவளை
ஞ்சி    -               ரண்டு அங்குலம்
. மிளகாய்          -               ஆறு
மஞ்சள் தூள்       -               ரண்டு சிறுகரண்டி
பெருங்காயம்      -               ரண்டு சிறுகரண்டி
சீரகம்    -               ரண்டு சிறுகரண்டி
மல்லிவிதை தூள்             -  ரண்டு சிறுகரண்டி
துண்டு செய்த மல்லிக்கீரை-          ஒரு குவளை
மிளகு    -               ரண்டு சிறு கரண்டி
முந்ணிளீ பருப்பு                -               அரை குவளை
மஞ்சைப் பழம்    -               ரண்டு
நெய்       -               நான்கு சிறு கரண்டி
உப்பு       -               தேவைக்கேற்ப
செய்முறைமஞ்சள்பொடி, காயம், சீரகம், மல்லிவிதைப் பொடி, மிளகு, . மிளகாய் துண்டுகள், ஞ்சித் துண்டுகள், உப்பு ஆகியன எல்லாம் சட்டியில் சிறிது நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்உருளைக் கிழங்கு துருவல், பச்சை உருளங்கடலை (பட்டாணி) ஆகியவையோடு அரை குவளை தண்ணீரும் சேர்த்து புரட்டிப் புரட்டி கால் மணி நேரம் வேக விடவும்.  வெந்ததும்  அவலைக் கொட்டிக் கிளறி அடுப்பை ஜீட்டு ஹிறக்கி முந்ணிளீப் பருப்புதுண்டு துண்டாக வெட்டிய மல்லிக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
வாழைப்பூ வடை
வாழைப்பூ      -       ஒன்று
தேங்காய் துருவல்      -       ஒரு மூடி
பொட்டுக்கடலை        -       ஒரு குழம்புக் கரண்டி
அரிசி   -       ஒரு குழம்புக்கரண்டி
மிளகாய் வற்றல்       -       எட்டு
ப. மிளகாய்             -       ஐந்து
பெரிய வெங்காயம்     -       இரண்டு
மல்லிக் கீரை           -       சிறிது
கறிவேப்பிலை          -       சிறிது
உப்பு                           -       தேவையான அளவு
எண்ணெய்                      -       தேவையான அளவு
வாழைப்பூவை நரம்பெடுத்து தூய்மை படுத்திக் கொள்ளவும். பின் அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீரில் வேகவைக்கவும். உரலில் தேங்காய் துருவல் பொட்டுக் கடலை, மிளகாய் வற்றல், ப.மிளகாய் எல்லாம் போட்டு ஆட்டவும்.  கடைசியாக வெந்த பூவையும் போட்டு ஆட்டவும்.  நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், மல்லிக்கீரை, கறிவேப்பிலை, உப்பு, அரிசிமாவு எல்லாம் கலந்து போதுமான தண்ணீர் சேர்த்து பிசைந்து சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி கொதித்ததும் வடைகளாகத் தட்டி வேக விட்டு எடுக்கவும்.

கேழ்ப்பை உருண்டை
கேழ்வரகு மாவில் திட்டமாக நீர் ஊற்றி பிசைந்து அடையாக தட்டி தோயைக் கல்லில் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.  தேவையான அளவு வறுத்த வேர்க் கடலை, வெல்லம் கலந்து இடித்து அல்லது மின் அம்மியில் அரைத்து உருண்டையாக பிடித்து வைக்கவும்.

எள் உருண்டை
எள்ளை இலகுவாக வறுத்து வெல்லம் சேர்த்து இடித்து உருண்டை பிடித்துத் தரலாம்.


பொரி அரிசி உருண்டை
அரிசியை வறுத்து பொடிக்கவும். உடைத்த கடலையை பொடி செய்து இவற்றுடன் வெல்லம் கூட்டி கலக்கவும். சிறிது வெந்நீர் மாவில் விட்டு பிசைந்து உருண்டை ஆக்கித் தரவும்.

முளைவிட்ட பாசிப்பருப்பு

பாசிப்பருப்பை முன்னிரவே ஊறவைத்து மறுநாள் காலை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்துவிட்டால், மாலைக்குள் நன்றாக முளைத்து விடும். அதனை எடுத்து அப்படியே சாப்பிடலாம்.  பிள்ளைகளுக்கு வெல்லம்  சேர்த்து சாப்பிடத் தரலாம்.

புடலங்காய் பாற்கண்ணல் (பாயாசம்)
புடலங்காய் துண்டுகள்  -       ஒரு குவளை
பாசிப்பருப்பு    - இரண்டு குவளை
வெல்லத்தூள்   - இரண்டு      குவளை
சிறுமணகம் (ஏலம் )    -       15
புடலங்காயை வெட்டி உள்ளே உள்ள சடை மற்றும் விதைகளை நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப் பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேக வைக்கவும்.
வெந்ததும் புடலங்காய் துண்டுகளையும் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் வெல்லத் தூளையும் சேர்த்து எல்லாம் ஒன்று சேரும்படி கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.  விருப்பமானால் இதோடு பால் சேர்க்கலாம். வறுத்த முந்திரிப்பருப்பு, சிறுமணகம் சேர்க்கவும்.

கனி அருந்தும் முறை
உண்பதற்கு முன் நெல்லிக் கனியும், உண்டபின் இலந்தைக் கனியும் இவ்விரு காலங்களிலும் விளாக்கனியும் உண்ணலாம்.  பொதுவாகக் கனிகளை உணவுக்கு அரை மணி நேரம் முன்னால் உண்ணவேண்டும்.

தயிர் தோய்க்கும் முறை வளி அல்லது காற்றுச் சிக்கலை நீக்க இஞ்சியும் ஐயமாகிய சளி, ஈரம் ஆகியவை ஒழிக்க சுக்கும், மிளகும், பித்தத்தை விலக்குவதற்கு வெல்லமும், செரியாமையால் உண்டான பிணிகளுக்கு சித்திர மூலப்பட்டையும் பாலில் இட்டுக்
காய்ச்சி தயிர் தோய்க்கலாம்.

ஓர் அயிரை    -    ஒரு கிராம்
ஒரு குவளை   -    250 அயிரை (கிராம்)
ஒரு சிறுகரண்டி -   5 அயிரை
ஒரு பெரிய கரண்டி -15 அயிரை 


         *        பழங்காலைத் தூர்க்காதே 
புதுக்காலை வெட்டாதே

*        செயற்கை உணவு, சமைத்த உணவு உண்ணும் செயற்கை வாழ்வால்  மலச்சிக்கல் உண்டாகிறது   

தமிழ் என்பது 
மொழி, இனம், நாடு மட்டுமல்ல
அது      
கலை, பண்பாடு, நாகரிகம்
                        உணவு, உடை, வாழ்வியல்
                        உறவு, உணர்வு, உயிர்ப்பு,
                        மனம், மெய், மருந்து,
                        அறிவு, ஆற்றல், ஆளுமை
         என எல்லாமுமானது.
           இவையே நமக்கு வலிமை சேர்ப்பன.         


  தட்டச்சு செய்து உதவிய திருவாட்டி.பிரேமா நீலமேகம் அவர்களுக்கு நன்றி.